பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா மருந்து ஆய்வு செய்ய வழக்கு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

மதுரை : 'கொரோனாவிற்கு கண்டுபிடிக்கப்பட்ட மூலிகை மருந்தை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலுார், எம்.மலம்பட்டியைச் சேர்ந்த, சித்த வைத்தியர் முனியாண்டி தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த, 30 வகை மூலிகைகள் கொண்ட மருந்து கண்டுபிடித்துள்ளேன். மருந்தை கொதிநீரில் கலந்து, நோயாளிகள் அருந்தலாம். மற்றவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். இது, முற்றிலும் பழமையான மருத்துவ முறையை பின்பற்றி, தயாரிக்கப் பட்டுள்ளது. இதை ஆய்விற்கு உட்படுத்தக் கோரி, தமிழக சுகாதாரத் துறை, மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. மருந்தை ஆய்விற்கு உட்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியுள்ளார்.

நீதிபதி, ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக சித்த மருத்துவ கவுன்சில் செயலர், பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி, ஜூலை, 29க்கு ஒத்தி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X