சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' வகுப்பு வழிமுறைகள் அரசு தாக்கல் செய்ய அவகாசம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சென்னை : மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்துவது தொடர்பாக, வழிமுறைகளை வெளியிட, தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

விசாரணை, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மொபைல் போன், மடிக்கணியை, மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். 'அப்போது, ஆபாச இணைய தளங்களால், கவனம் சிதைவதற்கு வாய்ப்பு உள்ளது. முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாமல், ஆன்லைனில் வகுப்புகள் நடத்த, தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் விமல் மோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ஆன்லைன் வகுப்புகளால், மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.'அதனால், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டு மணி நேரம் மட்டும், வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு சார்பில், ஏற்கனவே வழிமுறைகள் வெளியிடப்பட்டு விட்டதால், தமிழக அரசின் நிலை பற்றி, நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கல்வித் துறை சார்பில், சிறப்பு பிளீடர்முனுசாமி ஆஜராகி, வழிமுறைகள் வெளியிட அவகாசம் கோரினார்.இதையடுத்து, விசாரணையை, ஆக., 3க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X