பொது செய்தி

தமிழ்நாடு

புதிய தொட்டியில் நீர் கசிவா? குடிநீர் வடிகால் வாரியத்தினர் விளக்கம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 புதிய தொட்டியில் நீர் கசிவா? குடிநீர் வடிகால் வாரியத்தினர் விளக்கம்

திருப்பூர்:திருப்பூரில் புதியதாக கட்டிய மேல் நிலைத் தொட்டியில் நீர் கசிந்து வெளியேறுகிறது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 'அம்ரூத்' திட்டத்தில் நான்காவது குடிநீர் திட்டப் பணிகள் நடந்துங வருகிறது. இதற்காக மாநகராட்சி பகுதியில், 27 புதிய மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில், சோதனை முறையில் நீர் நிரப்பி ஆய்வு செய்யும் பணி நேற்று முன் தினம் நடந்தது. மூன்றாம் திட்ட குடிநீர் வினியோகத்தை நிறுத்தி, குழாய் இணைப்புகள் மூலம் புதிய மேல்நிலைத் தொட்டிகளுக்கு நீர் நிரப்பி ஆய்வு செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது.இதில் காந்தி நகர், சாய்பாபா கோவில் அருகிலுள்ள தொட்டியில், சோதனை முறையில் நீர் நிரப்பப்பட்டது. இதில் பல இடங்களில் நீர் கசிவதை பார்த்த, பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.குடிநீர் வாரிய அலுவலர்கள் கூறியதாவது:புதிய தொட்டி என்பதால், அதில் உள்ள ஏர் ேஹால்ஸ் வழியாக நீர்த்துளிகள் வெளிப்படும். இது வழக்கமான ஒன்றுதான். அதிகளவில் நீர் கசிவு ஏற்பட்டால், 'கிரவுண்டிங்' என்ற தொழில் நுட்ப முறையில் சரி செய்யப்படும். இரண்டொரு நாள் சோதனைக்கு பின், இது தெரிய வரும். இதில், எந்த பிரச்னையும் இல்லை,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X