பொது செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு திட்ட குழாய் வந்தாச்சு!

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

அவிநாசி:அத்திக்கடவு - அவிநாசி -நீர் செறிவூட்டும் திட்டப்பணிக்கான குழாய், கருவலுார் கிராமத்தில் தருவிக்கப்பட்டுள்ளன.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் அரை நுாற்றாண்டு கடந்த எதிர்பார்ப்பான, அத்திக்கடவு- - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி, முழுவீச்சில் நடந்து வருகிறது. முதல்கட்டமாக, நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், குளம், குட்டைகளை மையமாக வைத்து, ரோட்டோரம் குழாய் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது.அவிநாசி அருகேயுள்ள சேவூர், நடுவச்சேரி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில், குழாய் பதிக்கும் பணி துவங்க உள்ளது. கருவலுார் பகுதியில் குழாய்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. அத்திக்கடவு நீர் செறிவூட்டும் திட்டத்தை மையமாக வைத்து, பல கிராமங்களில் உள்ள குளம், குட்டைகள், அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினரால், குடிமராமத்து மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், துார்வாரி சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.ஆனால், அதிகளவிலான குளம், குட்டை உள்ள கருவலுாரில் குளம், குட்டை துார்வாரும் பணி நடந்ததாக தெரியவில்லை; அதற்கான முயற்சி எடுக்கப்பட்டதாகவும் தகவல் இல்லை. எனவே, கருவலுாரில் உள்ள குளம் குட்டைகளை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X