பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., கல்லூரிகளில் பாகுபாடா? அண்ணா பல்கலை விளக்கம்!

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : 'அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற கல்லுாரிகளில், தரமான கல்லுாரிகள், தரமற்ற கல்லுாரிகள் என்ற பாகுபாடு இல்லை' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூலை, 16ல், பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி நடந்து வருகிறது. அத்துடன், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான,
Anna University, Engineering College, colleges

சென்னை : 'அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற கல்லுாரிகளில், தரமான கல்லுாரிகள், தரமற்ற கல்லுாரிகள் என்ற பாகுபாடு இல்லை' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூலை, 16ல், பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி நடந்து வருகிறது. அத்துடன், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவுகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 89 கல்லுாரிகள் தரமற்றவை; அவற்றில் மாணவர்கள் சேர வேண்டாம் என்பதாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. இதற்கு, அண்ணா பல்கலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பல்கலையின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், இணைப்பு பெற்ற கல்லுாரிகளில், 89 கல்லுாரிகள் தரமற்றவை என்றும், அவற்றின் பெயர், தமிழக இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறியீட்டு எண் போன்றவையும், சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கல்லுாரிகள், தரமற்றவை என்றும், தரமானவை என்றும், பாகுபாட்டுடன் பிரிக்கப்படவில்லை.இதுபோன்ற கல்லுாரிகளின் பெயர், விபர பட்டியலையும், அண்ணா பல்கலை வெளியிடவில்லை. எனவே, சமூக வலைதளத்தில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
29-ஜூலை-202023:20:48 IST Report Abuse
Sathish பணம் அதிகம் கட்டி இன்ஜினியரிங் படிப்பை படிக்க வேண்டாம். Fees கம்மி அல்லது ஸ்காலர்ஷிப் கிடைத்தால் படிங்க. அதுவும் நல்ல கல்லூரியில் கிடைத்தால் மட்டும் படிங்க இல்லையென்றால் வேறு துறையை தேர்ந்தெடுக்கவும். நான் ஒரு இன்ஜினியரிங் துறை ஆசிரியர் என்ற முறையில் இதை சொல்கிறேன்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
28-ஜூலை-202023:36:28 IST Report Abuse
மலரின் மகள் WhatsApp செய்தி ஏற்கக்கூடியதே. அண்ணா பல்கலையின் இணைப்பு கலோரிகளில் ௨௦ சதவீதம் மிகவும் மோசம், ௩௦ சதவீதம் சுமாரான மோசம், மேலும் ௩௦ சதவீதம் பரவாயில்லை என்ற லட்சணத்தில் இருக்க பல்கலைக்கழகம் வெறும் ௨௦ கும் கீழான சதவீத கல்லூரிகளை மட்டும் சிறப்பாக வைத்து கொண்டு எப்படி சிறந்த பல்கலை என்று பெயர் சூட்டுகிறார்களோ? பல்கலையின் செயல்பாடுகள் தெண்டத்தை விட கொஞ்சம் பரவாயில்லை ரகத்தில் இருக்குமோ என்ற ஐயப்பாடு வருகிறதே? பல்கலை சற்று சீரியஸாக கவனிக்க வேண்டிய விஷயம்.
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
28-ஜூலை-202016:07:38 IST Report Abuse
kalyanasundaram IT IS UNFORTUNATE EDUCATION STANDARDS ARE LOWERED SINCE HIGHER EDUCATION STUDENTS UNDER GO MENTAL PRESSURE.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X