பொது செய்தி

தமிழ்நாடு

சிஞ்சுவாடியில் கால்நடை மருந்தகம் உத்தரவை அமல்படுத்த கோரிக்கை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடியில், கால்நடை மருந்தகம் துவக்க வேண்டும், என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடியில், கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ளது. இதனால், இப்பகுதியில் கால்நடை மருந்தகம் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், மருந்தகம் துவங்க அனுமதி கொடுத்த நிலையில், மருந்தகத்தை மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அரசு அறிவித்தபடி, சிஞ்சுவாடியிலேயே மருந்தகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது:சிஞ்சுவாடியில் புதிதாக கால்நடை மருந்தகம் அமைக்க அரசிடம் இருந்து ஆணை வரப்பெற்றுள்ளது. இந்த ஊராட்சியில், குண்டலப்பட்டி, சிஞ்சுவாடி, லட்சுமாபுரம் மற்றும் தேவநல்லுார் ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன.தற்போது, கால்நடை மருந்தகமானது சிஞ்சுவாடி ஊராட்சியில் உள்ள குண்டலப்பட்டியில் அமைய உள்ளதாக தெரிய வருகிறது.சிஞ்சுவாடி அனைத்து கிராமங்களுக்கும் பொதுவான கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் உள்ள குக்கிராமங்களிலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.சுற்றியுள்ள கிராம மக்கள், குண்டலப்பட்டி செல்ல ஐந்து கி.மீ., செல்ல வேண்டும். எனவே, அரசால் அனுமதிக்கப்பட்ட கால்நடை மருந்தகமானது சிஞ்சுவாடி கிராமத்தில் அமைக்க கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சருக்கு மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X