பொது செய்தி

தமிழ்நாடு

ஆடிப்பட்ட சாகுபடி தயாராகும் விவசாயிகள்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், ஆடிப்பட்ட சாகுபடிக்காக விவசாயிகள் நிலங்களை உழுது பக்குவப்படுத்தி வைத்துள்ளனர்.மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில், பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, பல நுாறு ஏக்கர் பரப்பில் காய்கறிப்பயிர்கள், மக்காச்சோளம் சாகுபடி நடக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சில பகுதியில் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதைப்பயன்படுத்தி, வரும் நாட்களில் சாகுபடி செய்ய, மழையை எதிர்பார்த்து நிலங்களை உழுது தயார்படுத்தி உள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'பருவமழை எதிர்பார்த்தபடி தொடங்கவில்லை. இருந்தாலும் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பருவநிலை மாறி குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நிலமும் சமன் செய்யும் அளவில் ஈரப்பதமடைந்துள்ளது. இதனால் விளைநிலங்களை உழுது தயார்படுத்தி வைத்துள்ளோம். எதிர்வரும் நாட்களில் மழை பெய்து, பயிர் வளர்ச்சிக்கு தகுந்த அளவில் நீர்வரத்து இருந்தால், அந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்தி ஆடிப்பட்ட சாகுபடியில் ஈடுபட தயாராக உள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X