உடுமலை, மலையாண்டிபட்டணம் செல்லும் ரோடு, தெருவிளக்கின்றி இருள் சூழ்ந்திருப்பதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.எஸ்.மாணிக்கம்,உடுமலை.'குடி' மகன்கள் தொல்லைஉடுமலை, ராஜலட்சுமி நகரில் 'குடிமகன்கள்' தொல்லை அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் நிம்மதியிழந்துள்ளனர்.வி.கணேசமூர்த்தி,உடுமலை.மக்கள் அவதிஉடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் காம்ப்ளக்ஸ் ரோட்டில், மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.சுப்பிரமணியம்,உடுமலை.போக்குவரத்து பாதிப்புஆனைமலை - சேத்துமடை ரோட்டிலுள்ள கடைகளுக்கு வருவோர், வாகனங்களை ரோட்டிலேயே ஆக்கிரமித்து நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கிறது.எம்.ராஜன்,ஆனைமலை.நிழற்கூரை வேண்டும்பொள்ளாச்சி, தேவம்பாடிவலசு கிராமத்தில், பயணிகள் நிழற்கூரை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். கிராமத்தில் நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.க. முருகன்,தேவம்பாடிவலசு.வாகனங்களால் இடையூறுபொள்ளாச்சி, அன்சாரி வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.ஆர். மணிகண்டன், பொள்ளாச்சி.