பொது செய்தி

தமிழ்நாடு

'சப்கா விஷ்வாஸ்' திட்ட வரித்தொகை செலுத்த கூடுதல் அவகாசம் தரப்படுமா?

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சென்னை : 'சப்கா விஷ்வாஸ்' திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட, வரித்தொகையை செலுத்த, கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும் என, வரி செலுத்துவோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், 2017ல் அமலுக்கு வந்தது. அதற்கு முன், மத்திய கலால் மற்றும் சேவை வரிச் சட்டம் அமலில் இருந்தது.இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில், ஆயிரக்கணக்கில் நிலுவையில் இருந்தன.இந்த வரி நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண, மத்திய அரசு, 'சப்கா விஷ்வாஸ்' என்ற, புதிய திட்டத்தை அறிவித்தது.

இந்த திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டு, அதைச் செலுத்த, ஜூன், 30 வரை, வரி செலுத்துவோருக்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், தொகையை செலுத்த, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, வரி செலுத்துவோர் கூறியதாவது:வரி நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண, சப்கா விஷ்வாஸ் திட்டம் செயல்படுத்தப் பட்டது.இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க, 2019 டிசம்பர் வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பின், செலுத்த வேண்டிய வரித்தொகை நிர்ணயிக்கப்பட்டது. அதற்குள், கொரோனா தொற்று பரவியதால், அந்த தொகையை செலுத்த, ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இருந்தாலும், ஊரடங்கு, தொழில் முடக்கம் காரணமாகவும், குறிப்பிட்ட அவகாசத்திற்குள், தொகையை செலுத்த முடியவில்லை.எனவே, சப்கா விஷ்வாஸ் திட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்த, கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும். அதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X