வடக்கே பறக்குது இளநீர்: ரூ.23 விலை நிர்ணயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கே பறக்குது இளநீர்: ரூ.23 விலை நிர்ணயம்

Added : ஜூலை 28, 2020
Share

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் இருந்து, வடமாநில பகுதிகளுக்கு அதிக அளவிலான இளநீர், விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.கோவை மாவட்டம், ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் இருந்து, தற்போது நாடு முழுவதிலும் தினமும், 1.5 முதல் 1.75 லட்சம் இளநீர் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட வடமாநில பகுதிகளுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது. அதேபோல், வழக்கம் போல சென்னை, மதுரை, ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.இளநீர் தோப்புகளில் தேங்குவதை தவிர்க்க, கடந்த வாரத்தை போல இந்த வாரமும் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இன்று முதல், வீரிய ஒட்டு ரக இளநீர் ஒன்று, பண்ணையில் வியாபாரிகளுக்கு, 23 ரூபாய்க்கு விற்பனை செய்ய, விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X