பொது செய்தி

தமிழ்நாடு

மகன்களுடன் சென்னைக்கு நடந்து சென்ற பெண் மீட்பு

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை, நடந்து சென்ற பெண், மீட்பு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே, தனியாக இரு மகன்களுடன் சென்னைக்கு நடந்தே சென்ற பெண்ணை, டி.எஸ்.பி., நடவடிக்கையால் மீட்டனர்.

திருச்சி - சென்னை சாலையில், விக்கிரவாண்டி அருகே, நேற்று மதியம், 35 வயது மதிக்கத்தக்க பெண், 12 - 8 வயது மகன்களுடன், சென்னை நோக்கி நடந்து சென்றார். கடும் வெயிலில் நடந்ததால், சோர்வுடன் காணப்பட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விசாரித்து, தண்ணீர் பாட்டில், பிஸ்கட் கொடுத்து உதவ முன்வந்தனர். அதை ஏற்க மறுத்த அப்பெண், தான் யார் என்ற விபரத்தையும் கூற மறுத்து விட்டார்.

தகவல் அறிந்த விழுப்புரம் டவுன், டி.எஸ்.பி., நல்லசிவம், விக்கிரவாண்டி, எஸ்.ஐ., மோசஸ் கிங்ஸ்லியை சம்பவ இடத்திற்கு அனுப்பி, விசாரிக்குமாறு கூறினார். எஸ்.ஐ.,யிடமும், அப்பெண் விபரங்களை கூற மறுத்தார். பின், எஸ்.ஐ., வழங்கிய பிஸ்கட், தண்ணீர் பாட்டிலை பெற்றுக் கொண்டார்.

அவர்களை பாதுகாப்பாக சென்னைக்கு அனுப்பி வைக்கவும், அதுவரை, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்க வைக்கவும், டி.எஸ்.பி., உத்தரவிட்டார். இதையடுத்து, மூவரையும் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஒப்படைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
01-ஆக-202010:14:15 IST Report Abuse
Nallavan Nallavan போலீசார் பெண்ணை... மீட்டனர் என்று படிப்பதே அதிசயமாக உள்ளது .......
Rate this:
Cancel
manis - doha,கத்தார்
31-ஜூலை-202016:01:18 IST Report Abuse
manis ஐயா நிருபரே காவல்துறையின் அனைவரது பெயரையும் பிரசுரித்து விளம்பரம் படுத்துனீரே அனால் அந்த பெண் பகலில் நடந்தாரா இல்லை இரவில் நடு சாமத்தில் கயவர்கள் உலாவும் நேரத்தில் நடந்தாரா என்ற விவரம் இடம் பெறவில்லை என்பது வருத்தம் தான் ..
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
29-ஜூலை-202004:15:09 IST Report Abuse
NicoleThomson மக்களை துன்புறுத்தும் அரசு அதிகாரிகள் இருந்தால் என்ன போனால் என்ன? இவர்களை ரெக்ரூட் செய்த வழிமுறைகளை ஆராயும் நேரம் வந்து விட்டதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X