மகன்களுடன் சென்னைக்கு நடந்து சென்ற பெண் மீட்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகன்களுடன் சென்னைக்கு நடந்து சென்ற பெண் மீட்பு

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (11)
Share
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே, தனியாக இரு மகன்களுடன் சென்னைக்கு நடந்தே சென்ற பெண்ணை, டி.எஸ்.பி., நடவடிக்கையால் மீட்டனர். திருச்சி - சென்னை சாலையில், விக்கிரவாண்டி அருகே, நேற்று மதியம், 35 வயது மதிக்கத்தக்க பெண், 12 - 8 வயது மகன்களுடன், சென்னை நோக்கி நடந்து சென்றார். கடும் வெயிலில் நடந்ததால், சோர்வுடன் காணப்பட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விசாரித்து, தண்ணீர்
சென்னை, நடந்து சென்ற பெண், மீட்பு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே, தனியாக இரு மகன்களுடன் சென்னைக்கு நடந்தே சென்ற பெண்ணை, டி.எஸ்.பி., நடவடிக்கையால் மீட்டனர்.

திருச்சி - சென்னை சாலையில், விக்கிரவாண்டி அருகே, நேற்று மதியம், 35 வயது மதிக்கத்தக்க பெண், 12 - 8 வயது மகன்களுடன், சென்னை நோக்கி நடந்து சென்றார். கடும் வெயிலில் நடந்ததால், சோர்வுடன் காணப்பட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விசாரித்து, தண்ணீர் பாட்டில், பிஸ்கட் கொடுத்து உதவ முன்வந்தனர். அதை ஏற்க மறுத்த அப்பெண், தான் யார் என்ற விபரத்தையும் கூற மறுத்து விட்டார்.

தகவல் அறிந்த விழுப்புரம் டவுன், டி.எஸ்.பி., நல்லசிவம், விக்கிரவாண்டி, எஸ்.ஐ., மோசஸ் கிங்ஸ்லியை சம்பவ இடத்திற்கு அனுப்பி, விசாரிக்குமாறு கூறினார். எஸ்.ஐ.,யிடமும், அப்பெண் விபரங்களை கூற மறுத்தார். பின், எஸ்.ஐ., வழங்கிய பிஸ்கட், தண்ணீர் பாட்டிலை பெற்றுக் கொண்டார்.

அவர்களை பாதுகாப்பாக சென்னைக்கு அனுப்பி வைக்கவும், அதுவரை, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்க வைக்கவும், டி.எஸ்.பி., உத்தரவிட்டார். இதையடுத்து, மூவரையும் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஒப்படைத்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X