பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் 'பயோ மெட்ரிக்' திட்டம் திருச்சியில் இன்று முதல் அறிமுகம்

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை : ரேஷன் கடைகளில், கார்டுதாரர்கள் மட்டுமே, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை உறுதி செய்யும், 'பயோமெட்ரிக்' எனப்படும், கைரேகை பதிவு செய்யும் திட்டம், திருச்சியில், இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.

தமிழக ரேஷன் கடைகளில், இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை, அரிசி கார்டு வைத்திருக்கும் வசதி படைத்தோர் வாங்குவதில்லை. செலவு அதிகரிக்கிறதுஅவர்கள், தங்களின் கார்டுகளை, வேலையாட்களிடம் வழங்கி, பொருட்கள் வாங்கிக் கொள்ளும்படி கூறுகின்றனர்.அவர்கள், அவற்றை வாங்கி, ஓட்டல்கள், மளிகை வியாபாரிகளிடம் விற்கின்றனர். இதனால், தமிழக அரசுக்கு, உணவு மானிய செலவு அதிகரிக்கிறது. அதனால், ரேஷன் கடைகளுக்கு, கார்டுதாரர்கள் மட்டும் வருவதை உறுதி செய்ய, அவர்களின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்கும் திட்டத்தை துவக்க, உணவு துறைக்கு, தமிழக அரசு, சமீபத்தில் அனுமதி வழங்கியது.

இதையடுத்து திருச்சியில், 1,213 ரேஷன் கடைகள், பெரம்பலுாரில், 282; அரியலுாரில், 440 ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டை, 'ஸ்கேன்' செய்யும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகளை எடுத்து விட்டு, கைரேகை பதியும் வசதி உடைய, நவீன பாயின்ட் ஆப் சேல் கருவிகள் வைக்கும் பணி, நேற்று முதல் துவங்கியுள்ளது.முதல் கட்டம்இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஊரடங்கால், ஒரே சமயத்தில், அனைத்து கடைகளிலும், கைரேகை பதிவு கருவிகளை வைக்க முடியவில்லை. ரேஷன் கார்டுகள், விழி, விரல் ரேகை உள்ளிட்ட விபரங்கள் இருக்கும், 'ஆதார்' எண் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, கார்டுதாரர்கள், பயோமெட்ரிக் கருவியில், தங்களின் விரலை பதிவு செய்தால், அந்த விபரம், ஆதார் எண் வாயிலாக உறுதி செய்யப்படும்.முதல் கட்டமாக, திருச்சியில், திருச்சி கிழக்கில், 121; திருச்சி மேற்கில், 92; மணச்சநல்லுாரில், 94 கடைகளில், இன்று கைரேகை கருவிகள் வைக்கும் பணி நடக்கிறது. அவற்றை எப்படி பயன்படுத்துவது என, ரேஷன் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த கடைகளில், நாளை முதல், கார்டுதாரர்கள் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வாங்கலாம்.அடுத்த இரு தினங்களில், திருச்சி, அரியலுார், பெரம்பலுாரில் உள்ள அனைத்து கடைகளிலும், கைரேகை கருவிகள் வைக்கும் பணி முடிந்து, அவற்றின் வாயிலாக பொருட்கள் வழங்கப்படும்.

இதனால், கார்டில் உள்ள உறுப்பினர்களை தவிர, வேறு நபர்கள் வாங்க முடியாது. அடுத்த மாத இறுதிக்குள், அனைத்து கடைகளிலும், கைரேகை பதிவு கருவிகள் வைக்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Musthafa - Cuddalore,இந்தியா
28-ஜூலை-202011:36:14 IST Report Abuse
Musthafa அரசாங்கம் விழித்துக்கொண்டது மக்கள் வரிப்பணம் சேமிக்கப் படுகிறது இது அனைத்து மாவட்டங்களிலும் வரவேண்டும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
28-ஜூலை-202008:45:51 IST Report Abuse
Bhaskaran ரேஷன் கடை காரர்கள் மாற்றுவழி வைத்திருப்பார்கள் vaanga Antha கார்டுகளுக்கும் வாங்கியதாக கணக்கு பண்ணுவார்கள் அதிகாரிகளும் உடந்தை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X