பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை இடையே பல அடுக்கு சாகுபடி: வருவாயை பெருக்க தோட்டக்கலைத்துறை 'அட்வைஸ்'

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

உடுமலை:'தென்னை சாகுபடியில், பல அடுக்குகளாக தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்,' என தோட்டக்கலைத்துறை 'அட்வைஸ்' வழங்கியுள்ளது.உடுமலை பகுதியில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. கிணற்றுப்பாசனத்தின் மூலம் தென்னை மரம் வளர்க்கும் விவசாயிகள், பல அடுக்கு சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சாகுபடியால், மண் வளம் அதிகரிப்பதுடன், வருவாயும் பல மடங்கு உயரும்.இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: தென்னந்தோப்புகளில், மரங்களுக்கு இடையில் கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி, பல்வேறு தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்யலாம்.தென்னை மரத்தின் மேல்பகுதியிலிருந்து, மண் பகுதி வரையுள்ள இடைவெளியில், பல்வேறு உயரங்கள் கொண்ட, பயிர்வகைகளை தேர்வு செய்து நடலாம்.முதல் அடுக்கில், அதிக உயரம் வளரக்கூடிய, ஜாதிக்காய், சில்வர் ஓக் ஆகிய மரங்களை நடவு செய்வதால், தென்னை மரங்களுக்கு இணையாக வளர்ந்து, நீண்ட கால வரவு கிடைக்கும். இரண்டாவது அடுக்காக, தென்னை மரத்தை சார்ந்து, 12 முதல் 15 அடி உயரம் வரை ஓலைகளை ஊடுருவி, சூரிய ஒளியை அறுவடை செய்ய உதவும், குருமிளகு பயிரிடலாம்.மூன்றாம் அடுக்காக தென்னையின் இடையே உள்ள மண் பகுதியில், ஆணி வேர்கள் செலுத்தி, குறைந்த உயரத்தில்,3 முதல் 4 அடி உயரம் மட்டும் வளரும்கோகோ பயிரை தேர்வு செய்யலாம். மேலும், அதே உயரத்தில் வளரும் அகத்தி, கறிவேப்பிலை, மரவள்ளி ஆகிய பயிர்களையும் நடவு செய்யலாம்.நான்காவது அடுக்காக நிழலில் மிகக்குறைந்த வெளிச்சத்தில் வளரும், அன்னாசிப்பழம், இதர புல்கரணைகள், கம்பு, கனகாம்பரம், இஞ்சி, சேனை, சம்பங்கி மலர், மல்லிகை ஆகிய சாகுபடிகள் பரிந்துரைக்கப்படுகிறது. மண் வளத்தை பாதுகாக்கும், வெட்டிவேர், கொழுக்கட்டைப்புல், கொத்து அவரை, கொத்தமல்லி, ஆகியவற்றையும் கலந்து பயிரிடலாம்.இத்தகைய அடுக்கு முறை சாகுபடியால், கூடுதல் வருவாய் கிடைக்கும். இத்தகைய ஊடுபயிர்களை பயிரிடும் போது, தென்னை பாதிக்கப்படாமல் இருக்க, மண் வளம் அறிந்து உரமிடவேண்டும். இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X