சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்று இருப்பதாக போலி 'ரிசல்ட்' ; பரிசோதனை மையத்திற்கு 'சீல்'

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 தொற்று இருப்பதாக போலி 'ரிசல்ட்' ; பரிசோதனை மையத்திற்கு 'சீல்'

திருச்சி : திருச்சியில், கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக குறித்து கொடுத்ததாக, தனியார் மருத்துவ பரிசோதனை மையத்துக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி, உறையூர் அருகே, ராமலிங்க நகரில், நான்கு மாடி கட்டடத்தில், ரத்த வங்கியுடன் இணைந்த, தனியார் மருத்துவ பரிசோதனை மையம் செயல்பட்டு வந்தது.ஏற்கனவே, டெங்கு பரவிய போது, இந்த மையத்தில் பரிசோதனை செய்தவர்களுக்கு, தவறான அறிக்கை கொடுத்து, பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பியதாக புகார் எழுந்தது.தற்போது, இந்த மையத்தில் கொரோனா பரிசோதனை செய்தவர்களில், தொற்று இல்லாதவர்களுக்கும் தொற்று இருப்பதாக, தவறான அறிக்கை கொடுத்து, தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்ததாக புகார் எழுந்தது.

இதன் அடிப்படையில், கடந்த, 25ல், மையத்தில் ஆய்வு நடத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், கொரோனா பரிசோதனைக்கு தடை விதித்து, 'நோட்டீஸ்' கொடுத்தனர்.இருப்பினும், மற்ற மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடந்தன.இந்நிலையில், நேற்று மருத்துவ பரிசோதனை மையத்தில் இருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டு, மாநகராட்சி சார்பில், கட்டடத்துக்கு சீல் வைத்து, தகர தடுப்புகள் வைத்து மூடப்பட்டது.மேலும், மாவட்ட நிர்வாகம் தரப்பில், கொரோனா பரிசோதனைக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.

'கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு தவறான அறிக்கை கொடுத்ததற்காக, பரிசோதனை மையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டட விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதால், அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chidam - 325,இந்தியா
30-ஜூலை-202014:46:29 IST Report Abuse
Chidam சீல் வச்சா மட்டும் போதாது, தவறான அறிக்கை கொடுத்த அதில் பணிபுரியும் டாக்டர், லேப் டெக்னீசியன், செவிலியர் அனைவரின் தகுதி சான்றிதழை ரத்து செய்து அவர்களையும் கைது செய்ய வேண்டும்... இந்த தொற்றுவியாதியில் மக்கள் கஷ்டத்திலிருக்கும் போதும் காசு சம்பாதிக்க நினைக்கும் இதுக்கு பதில் வேற தொழில் செய்யலாம்
Rate this:
Cancel
samkey - tanjore,இந்தியா
29-ஜூலை-202008:39:56 IST Report Abuse
samkey ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் +டூ பாடங்களை +ஒன்னில் இரண்டு வருடம் படித்து நெட்டுரு போட்டு தேர்வெழுதி அதிக மதிப்பெண் பெற்று அதே பாணியில் படித்துவிட்டு டாக்ட்டராகி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாமல் சில ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பாணி புரிந்துவிட்டு காக்கை உட்கார பணபஷம் விழுந்த கதையில் கைராசி டாக்டர் என பெயர் பெற்று நல்ல இடமாக பார்த்து ஒரு கிளினிக் ஆரம்பிக்கிறான் பிறகு ஓரிரு ஆண்டுகளில் அந்த இடத்தையே வாங்கிவிடுவதொடு சுற்றுப்புற இடங்களையும் வளைத்து வாங்கி மல்டி ஸ்பேசியலிட்டி மருத்துவமனையாக்கிவிடுகிறான் பேங்க் காரன் அவன் கேட்க்கும் அளவுக்கு லோன் தருகிறான். பிறகென்ன அவன் கொடுப்பதுதான் ரிப்போர்ட் செய்வதுதான் சிகிச்சை.அடிப்பது தான் கொள்ளை. இதுதான் அரசியல் வியாதிகளுக்குப்பின் டிஜிட்டல் இந்தியாவில் குறுகிய காலத்தில் பணக்காரனாகும் தொழில் நுட்பம். இது அணைத்து நகரங்களிலும் உள்ளது.
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
28-ஜூலை-202017:46:28 IST Report Abuse
S.P. Barucha சம்பவம் உண்மையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X