பொது செய்தி

தமிழ்நாடு

நன்மை செய்யும் பூச்சிகள் தேவை! உயிர் உரங்கள் பயன்படுத்த 'அட்வைஸ்'

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள், உயிர் உரங்கள் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்ய, வேளாண்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.ஆனைமலை வேளாண்துறையினர் கூறியதாவது:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், நெல், நிலக்கடலை, எள், பாசிப்பயறு, தட்டைப்பயறு, உளுந்து உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள், பயிர்களுக்கு பல வகை ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துகின்றனர்.அதிக அளவு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்பாட்டால், பயிர்களில் நன்மை செய்யும் பூச்சிகள் பாதிக்கிறது. இதனால், தீமை செய்யும் பூச்சிக்களின் எண்ணிக்கை அதிகரித்து, நாளுக்கு நாள் பல்வேறு பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் பாதிப்படைகிறது.ரசாயனத்தால் மண்புழுக்கள், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் அழியும் நிலை ஏற்படுகிறது.ரசாயன உரத்துக்கு மாற்றாக, இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உயிர் உரங்களை பயன்படுத்தி, மண்ணுக்கும் பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத இயற்கை விவசாயம் செய்யலாம்.நெல், எண்ணெய் வித்து மற்றும் பயறுவகைகளில் பூச்சி தாக்குதலுக்கு, அசோஸ்பைரில்லம் உரம் பயன்படுத்தலாம். இதனால், வேர் முடிச்சுக்கள் அதிகரித்து நைட்ரஜன் சத்துக்களை பெருக்கவும் உதவுகிறது.பயிர்களில் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் உரமும், மண்ணில் மணிச்சத்தை அதிகரிக்க ரசாயன உரத்துக்கு மாற்றாக, ரைசோபியம் உயிர் உரமும் பயன்படுத்தலாம்.டிரைகோடெர்மா விரிடி உரம் பயன்பாட்டால், பயறு எண்ணெய் வித்து, பயறு வகை பயிர்களில் வேர் அழுகல் நோய், பூஞ்சாண வகை நோயையும் கட்டுப்படுத்த முடியும். விவசாயத்துக்கு அடிப்படையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் உள்ளிட்ட சத்துக்கள், உயிர் உரங்களால் இயற்கை முறையில் மண்ணுக்கு கிடைக்கிறது.ரசாயனத்தால் கிடைக்கும் சத்துக்களை உயிர் உரங்கள் மற்றும் இயற்கை முறையிலேயே பெற முடியும். விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, ஆனைமலை வேளாண் விரிவாக்க மையத்தில், உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. ரசாயனத்தை கைவிட்டு விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய முன்வர வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X