பொது செய்தி

தமிழ்நாடு

ஆயிரம் கிலோ கபசுர பொடி சித்தா பிரிவில் வழங்கல்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லுாரி, தாலுகா அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக சிகிச்சையில் உள்ளவர்களுக்கு, பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.அவ்வகையில், கடந்த இரு மாதங்களில், மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை வாயிலாக ஆயிரம் கிலோ கபசுர பொடி வினியோகம் செய்யப்பட்டுள்ளது.சித்த மருத்துவ அலுவலர்கள் கூறியதாவது:கபசுர குடிநீர், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து கொரோனா தாக்கத்தின் பாதிப்பை வெகுவாக குறைக்கிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் உள்ள சித்தா மருத்துவப் பிரிவில் இலவசமாக வழங்கப்படுகிறது.க்ஷகபசுர குடிநீர் பருகுவதால் தொண்டை வலி, இருமல், தும்மல், சளி மற்றும் இடைவிடாத காய்ச்சல் முதலிய பாதிப்பில் இருந்து விடுபடலாம். வயிற்றுப்புண், மூலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், கர்ப்பிணிகளும் டாக்டரின் ஆலோசனைப்படி பருக வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X