பொது செய்தி

தமிழ்நாடு

விரைந்து குணமடையும் கொரோனா நோயாளிகள்: ஒரே நாளில், 34 பேர் டிஸ்சார்ஜ்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில், கொரோனா சிகிச்சையில் குணமடைந்த, 34 பேர் வீடு திரும்பினர்.திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர்.தீவிர காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, ஐ.சி.யு., பிரிவில், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள் வழங்கப்படுவதால், நோயாளிகள் விரைந்து குணமடைகின்றனர்.அவ்வகையில், 134 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று, 34 நபர்கள், முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். அதேசமயம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 31 பேர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அதன்படி, கொரோனா சிகிச்சை வார்டில், 131 நபர்கள் உள்ளனர்.பி.சி.ஆர்., பரிசோதனை மையத்தில், 80 நபர்கள், சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கொரோனா தொற்று சந்தேகத்தில், தனிமைப்படுத்தப்பட்டு வார்டில், 17 நபர்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X