திருப்பூர்:'நாசா' சார்பில் செவ்வாய்க்கு அனுப்பப்படும் ராக்கெட்டை வீட்டில் இருந்தே, மெய்நிகர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) முறையில் காணும் வாய்ப்பை நாசா ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' வரும், 30ம் தேதி செவ்வாய் கிரகத்துக்கு, 'ரோவர்' எனும் விண்கலத்தை அனுப்ப உள்ளது.செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகள், மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்துவருவதற்கான சாத்தியக்கூறுகளையும் இவ்விண்கலம் ஆராய உள்ளது. இதில் இணைத்து அனுப்பப்படும், மைக்ரோ சிப்பில் மக்களின் பெயர்களையும் பதிந்து அனுப்ப ஆர்வமுள்ளோரின் பெயர்கள் கேட்டறியப்பட்டன.தற்போது, இந்த விண்கலம் ஏவுதலை மெய்நிகராக (விர்ச்சுவல் ரியாலிட்டி) காணும் வாய்ப்பையும் நாசா வழங்கியுள்ளது. குறிப்பாக, https://www.eventbrite.com/e/mars-online-launch-participation-registration-109297596052 என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்தால், விண்கலம் ஏவுதலை வீட்டில் இருந்தே விர்ச்சுவல் முறையில் காணலாம்.மாணவர்கள் ஆர்வம்திருப்பூர், மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சரவணன் கூறியதாவது:மாணவர்களிடம் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை துாண்டும் விதமாக, 5 - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் இதுகுறித்து தகவல்களை அனுப்பியுள்ளோம்.பள்ளியை சேர்ந்த, 100 மாணவர்கள் நாசா இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு நாசாவால் பிரத்யேக லிங்க் அனுப்பப்படும். இதன்மூலம் வீட்டில் இருந்தே, விண்கலம் ஏவுதலை நேரில் பார்ப்பது போலான உணர்வை மாணவர்கள் பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE