பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாட்டு மண்டலத்தில் கவனம் செலுத்த வேண்டும்! பொதுமக்கள் வேண்டுகோள்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

பல்லடம்:பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட அருள்புரம் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர், கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய் தொற்று காரணமாக, எம்.ஜி.ஆர்., நகர் பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ளது. ஆனால், அதிகாரிகள் யாருமே அருள்புரத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அப்பகுதியினர் கூறியதாவது:நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், யார் யாருடன் தொடர்பில் இருந்தனர், அவர்களுக்கும் தொற்று உள்ளதா என்ற விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், பத்து நாட்களுக்கு மேல் ஆகியும், பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிகாரிகள் யாருமே வரவில்லை.நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதுடன் அவர்கள் பணி நிறைவடைந்ததாக விட்டு விட்டனர். இதனால், இப்பகுதியில் மேலும் யாருக்காவது தொற்று இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. உரிய ஆய்வு மேற்கொண்டு, எங்களின் அச்சத்தை போக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X