குவைத்தில் ஒரே நாளில் தொற்றில் இருந்து 684 பேர் மீண்டனர்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

குவைத் : குவைத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 684 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news




கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. குவைத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் தொற்று நோயில் இருந்து குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

குவைத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு 606 பேர் பாதிக்கப்பட்டனர். நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,379 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 358 பேர் குவைத்தையும், 248 பேர் பிறநாடுகளையும் சேர்ந்தவர்கள். நோய் தொற்றுக்கு புதிதாக 5 பேர் பலியாகினர். குவைத்தில்பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 438 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



குவைத்தில் 121 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 684 பேர் நோய் தொற்றில் இருந்து மீட்கப்பட்டனர். குவைத்தில் தொற்று பாதிப்புகளில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 55,057 ஆக அதிகரித்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X