பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தனித்திறன் மேம்படுத்த சிறகுகள் விரியட்டும்!ஊரடங்கு காலம் கைகொடுக்கிறது

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
  குழந்தைகள் தனித்திறன் மேம்படுத்த சிறகுகள் விரியட்டும்!ஊரடங்கு காலம் கைகொடுக்கிறது

பொள்ளாச்சி:கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் விடுமுறை நாட்களை பயன் உள்ளதாக மாற்றி குழந்தைகளின் தனித்திறன்களை மேம்படுத்த, பொள்ளாச்சியில் பெற்றோர் வழிகாட்டுதலுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், பள்ளிகள் திறப்பு எப்போது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. 'டிவி' வாயிலாக பாடம் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தனியார் பள்ளிகள், 'ஆன்லைன்' வகுப்புகளை துவக்கி மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றன. 'ஆன்லைன்' வகுப்பு இருந்தாலும், குழந்தைகளின் தனித்திறமைகளை மேம்படுத்த இந்த விடுமுறை நாட்களை பயன் உள்ளதாக மாற்ற, பொள்ளாச்சி அருகே பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பொள்ளாச்சி சின்னாம்பாளையம் அருகே சக்தி நகர் வீட்டு வசதி வாரிய அரசு ஊழியர் குடியிருப்பு உள்ளது. இங்கு, பல்வேறு துறைகளில் பணியாற்றும், 75 அரசு ஊழியர்களின் குடும்பங்கள் உள்ளன.இங்குள்ள குழந்தைகளுக்கு, கல்வியோடு தனித்திறமையை மேம்படுத்த பெற்றோர் திட்டமிட்டனர். குழந்தைகளிடம் உள்ள திறமையை கண்டறிந்து, அவர்களோடு இணைந்து அதனை மேம்படுத்த வழிகாட்டி வருகின்றனர். ஓவியம் வரைதல், தேவையில்லாத பொருட்களை கொண்டு கைவினை பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.பொதுமக்கள் கூறியதாவது:மாணவர்களுக்கு கல்வியோடு தனித்திறமைகளை மேம்படுத்த இந்த விடுமுறை நாட்கள் பயன் உள்ளதாக உள்ளது. 'ஆன்லைன்' வகுப்பு நேரம் தவிர, மற்ற நேரங்களில் மாணவர்களுக்கு இதுபோன்று பயிற்சி அளிக்கப்படுகிறது. கதை சொல்லுதல் நிகழ்ச்சி மூலம் மாணவர்களிடம் நல்ல கருத்துக்களை பதிய வைக்கிறோம்.மேலும், நீதித்துறை, வனத்துறை என அரசுத்துறை குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசிப்பதால், அவர்கள் வாரத்தில் ஒரு நாள், அந்த துறை பற்றிய தகவல்களை மாணவர்களிடம் விளக்கம் அளிக்கின்றனர். இதனால், ஒரு துறை பற்றிய பொது அறிவு மாணவர்களுக்கு கிடைக்கிறது.மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்; வீடுகளின் சுவர்களில் தங்களது கைவண்ணங்களில் ஓவியத்தை தீட்டி அசத்துகின்றனர். வீட்டில் குழந்தைகளை எப்படி சமாளிப்பது என யோசிக்காமல், அவர்களது வழியில் சென்று, அவர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை மேம்படுத்த திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இது புது அனுபவத்தை அளிக்கிறது.மாணவர்கள் விளையாட்டு திறமையை மேம்படுத்த, விளையாட்டு திடல் அமைக்கவும்; அறிவுத்திறமை மேம்படுத்த நுாலகம் அமைக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.மூலிகை தோட்டம்!மாணவர்களின் திறமையை மேம்படுத்த பயிற்சி அளிப்பதுடன், மூலிகை பயன்பாடு குறித்தும் விளக்கப்படுகிறது. முடக்கத்தான், குப்பை மேனி, கற்பூர வள்ளி உள்ளிட்ட, 12 வகையான மூலிகை செடிகள் நடவு செய்து, அப்பகுதி குடியிருப்பு வாசியுடன் மாணவர்களும் இணைந்து பராமரித்து வருகின்றனர்.மேலும், மாணவர்களிடம் எந்தந்த மூலிகை எதற்கு பயன்படும் என்பது குறித்து, பெற்றோர் விளக்கம் அளிக்கின்றனர். இதனால், மாணவர்களிடம் மூலிகை குறித்த அறிவும் மேம்படும்; பாரம்பரிய மருத்துவ முறைகளையும் அறிந்து கொள்வார்கள் என்கின்றனர் பெற்றோர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X