மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்

Added : ஜூலை 28, 2020
Share
 மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டப்பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வினியோகிக்கப்படுகிறது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 4,158 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.தொடர்ந்து உயர்நிலைக் கல்வியில் மாணவர்கள் சேர்வதற்கான மாற்றுச்சான்றிதழ், உயர்நிலையில் அசல் மற்றும் மேல்நிலையின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நேற்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் விபரங்கள், பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. கடந்தாண்டு முதல் இந்த இணையதளத்திலிருந்து, மாற்றுச்சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.மாணவர்களின் உடல் வெப்பநிலையை, 'தெர்மல் ஸ்கேனர்' மூலம் அறிந்த பின்னரே பள்ளிக்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.மாணவர்களிடம், இணையதளத்தில் இருக்கும், மாற்றுச்சான்றிதழில் உள்ள விபரங்கள் ஒருமுறை உறுதிசெய்துகொண்டு, ஆசிரியர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து வழங்கினர்.மாற்றுச்சான்றிதழுடன், மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தற்போதைய பிளஸ் 2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழ்களை வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X