பொது செய்தி

தமிழ்நாடு

கரிசல் குளத்து கரையில்பனை விதைகள் நடவு: தன்னார்வ அமைப்புகள் ஏற்பாடு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 கரிசல் குளத்து கரையில்பனை விதைகள் நடவு: தன்னார்வ அமைப்புகள் ஏற்பாடு

உடுமலை:உடுமலை ஏழு குள பாசனத்திட்டத்துக்குட்பட்ட, குளங்களின் கரைகளில், பனை மரங்கள் அதிகளவு இருந்தன. நீர்நிலைகளின் அரணாக இருக்கும் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும், மீண்டும் வளர்த்தெடுக்கவும், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. அவ்வகையில், தென்பூதிநத்தம் கிராமத்திலுள்ள, கரிசல் குளத்து கரையில், பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக, சுற்றுப்பகுதியில், இருந்து பனம்பழங்கள், சேகரிக்கப்பட்டது. நேற்று, அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி, பனை விதைகள், கரிசல் குளத்தின் கரையில் நடவு செய்யப்பட்டது. ஏழு குள பாசன தலைவர் செல்வராஜ் விதைப்பு பணிகளை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.குளத்து கரையில், 4 ஆயிரம் பனை விதைகள் விதைக்க திட்டமிடப்பட்டு, 2 ஆயிரம் பனை விதைகள் நேற்று நடவு செய்யப்பட்டது. இப்பணியில், வனத்துக்குள் வாளவாடி, ஜல்லிபட்டி விருட்ச பிரம்மம், குரல்குட்டை ஈகை சூழலியல் குழு, பெதப்பம்பட்டி மக்கள் தொண்டு அமைப்பு உட்பட தன்னார்வ அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X