பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி : மாவட்ட அதிகாரிகள் ஆய்வு

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி : மாவட்ட அதிகாரிகள் ஆய்வு

உடுமலை:பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், உடுமலை நகராட்சியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

உடுமலை நகராட்சியில், 15 ஆயிரத்து 981 வீடுகள் உள்ளன. 2016 மக்கள் தொகை அடிப்படையில், 61 ஆயிரத்து, 150 பேர் வசித்து வருகின்றனர்.தற்போது, பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், நன்னீரில் உற்பத்தியாகும் 'ஏடிஸ்' வகை கொசுவால், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதனையடுத்து, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.இப்பணிகளை, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் எஸ்தர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வம், களப்பணியாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:டெங்கு கொசு, மண் தொட்டிகள், கீழ்நிலை, மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள், வீட்டை சுற்றிலும் வீணாக உள்ள, தேங்காய் தொட்டிகள், டயர், பிரிட்ஜ், பூச்செடிகள், நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தண்ணீர் தொட்டி, டிரம், பாத்திரம் ஆகியவற்றில் உற்பத்தியாகும். இவ்வகை கொசு, சுத்தமான தண்ணீரில் மட்டும், 14 முதல் 21 நாட்கள் வளரக்கூடியது. இந்த 'ஏடிஸ்' வகை கொசுக்கள், பகலில் கடித்து நோய் பரப்புகிறது.

எனவே, இவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கொசுப்புழுக்களை கண்காணித்து அழிக்க, 5 சுகாதார ஆய்வாளர் தலைமையில், தலா 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம், வீடு வீடாக 'அபேட்' மருந்து தெளிப்பது, வாகனங்கள் மூலம் கொசு மருந்து அடிப்பது, கழிவுநீர் சாக்கடைகளில் கொசு மருந்து தெளிப்பது என கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.எனவே, வீடு மற்றும் வீட்டை சுற்றிலும் வீணாக உள்ள பழைய டயர்கள், பானை, ஆட்டுக்கல், தேங்காய் ஓடு, பூந்தொட்டி, மேல்நிலைத்தொட்டி, மரப்பொந்து, என நன்னீர் தேங்கும் பகுதிகளில் தேங்கியுள்ள நீரில், கொசு உற்பத்தியாகாமல் கண்காணித்து, அழிக்க வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X