பொது செய்தி

தமிழ்நாடு

இளையாத்தக்குடியில் கடலை சாகுபடி அதிகரிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 இளையாத்தக்குடியில் கடலை சாகுபடி அதிகரிப்பு

நெற்குப்பை:திருப்புத்துார் அருகே இளையாத்தக்குடி, நெற்குப்பையில் தொடர் மழையால் கடந்த ஆண்டை விட கடலை சாகுபடி அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு பெரிய மழை பெய்யாவிட்டாலும், திருப்புத்துாரில் அவ்வப்போது தொடர்ந்து ஓரளவு மழை பெய்வது தொடர்கிறது.இதனால் மானாவாரி பயிரான கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.திருப்புத்துார் பகுதியில் இளையாத்தக்குடி, நெற்குப்பை வட்டாரக் கிராமங்களில் விவசாயிகள் கடலை சாகுபடியை அதிகரித்துள்ளனர். இப்பகுதியில் ஆடி, மார்கழி பட்டங்களில்கடலை விதைப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு இப்பகுதியில் 250ஏக்கரில் மானாவாரி கடலை சாகுபடி காணப்பட்டது.இந்த ஆண்டு அதை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மருத்துவக்குடிப்பட்டி சங்கீ கூறுகையில், ' வைகாசியில் விதைத்து இப்போது கடலை செடிக்கு வேர் பிடித்து மண் அணைத்து வருகிறோம். முதல் களை எடுப்பு முடிந்து விட்டது. இரண்டாவது களை எடுத்தவுடன் கடலை பிடித்து விடும். ஆவணி கடைசியில் அறுவடை செய்து விடுவோம். இந்த ஆண்டு மழை பெய்வதால் நல்ல விளைச்சல் இருக்கும்' என்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X