வீட்டு பொருட்களை இடமாற்ற தபால் துறையை அணுகலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு பொருட்களை இடமாற்ற தபால் துறையை அணுகலாம்

Added : ஜூலை 28, 2020
Share

பொள்ளாச்சி:அதிக எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல, தபால் துறையின், 'லாஜிஸ்டிக் போஸ்ட்' வசதியை பயன்படுத்த கோட்ட தபால் துறை கண்காணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.பொள்ளாச்சி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் கல்யாணவரதராஜன் அறிக்கை:பொள்ளாச்சி தபால் கோட்ட அளவில், உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி சுற்று பகுதியில், வீடு, அலுவலகங்களுக்கு, கூடுதல் எடையுள்ள பொருள்களை இடம் மாற்ற, தபால் துறையில் 'லாஜிஸ்டிக் போஸ்ட்' வசதி செயல்படுகிறது. வீட்டு உபயோகப் பொருள்கள், இரு சக்கர வாகனங்கள், தொழிற்சாலை பயன்பாட்டு பொருள்கள், பெரிய பார்சல்கள் மற்றும் வீடு மாற்றும் போது, பொருள்களை எடுத்து செல்ல வாகன வசதியும் உள்ளது. பொருள்களின் எடை, தொலைவு, மற்றும் பொருள்களின் மதிப்பு கூட்டு வசதியை பொருத்து, கட்டணம் நிர்ணயிக்கப்படும்.பார்சல் சென்று சேர்ந்தவுடன் கட்டணம் செலுத்தும் வசதி உண்டு. குறைந்த கட்டணத்தில் செயல்படும் இந்த வசதியை மக்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்.கூடுதல் விபரங்களுக்கு, மார்க்கெட்டிங் பிரதிநிதியை, 97888 15985 என்ற மொபைல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X