பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி அலுவலகத்துக்கு 'சீல்': மக்கள் வருவதற்கு தடை விதிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 நகராட்சி அலுவலகத்துக்கு 'சீல்': மக்கள் வருவதற்கு தடை விதிப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், 14 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால், அலுவலகம் மூடப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் வர வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் மற்றும் பொறியாளர் உள்பட, 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து, நகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.மேலும், நகராட்சி அலுவலக நுழைவுவாயில் மூடப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சியில், 14 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, ஒரு வாரத்துக்கு அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.பாதிப்புக்கு உள்ளானோருடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவும்; தொற்று அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.பிறப்பு, இறப்பு சான்றிதழ் விண்ணப்பிக்கவும்; கட்டணம் செலுத்தவும் நேரில் வர வேண்டாம். 'ஆன்லைன்' மூலமாககட்டணம் செலுத்திக்கொள்ளலாம்.ஆதார் மையம்,இ-சேவை மையம் என நகராட்சி அலுவலகம் முழுவதும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் நேரில் வர வேண்டாம்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X