பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு; 3 பேர் பங்கேற்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 பிளஸ் 2 தேர்வு; 3 பேர் பங்கேற்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வினை மூன்று பேர் எழுதினர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த மார்ச், 24ம் தேதி பிளஸ் 2 இறுதி தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நேதாஜி ரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் பள்ளி என மூன்று மையங்களில் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.பொள்ளாச்சி நேதாஜி ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இரண்டு மாணவியர், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒரு மாணவரும் தேர்வு எழுதினர். இதற்காக கண்காணிப்பு பணியில் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தேர்வு எழுத வருகை புரியாத மாணவர்களுக்கு, மறு தேர்வு நடத்தப்பட்டது. கணக்குப்பதிவியல், வேதியியல் பாடத்துக்கு தேர்வு நடந்தது.மாணவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. தேர்வு எழுதும் அறை கிருமிநாசினி தெளித்து துாய்மைப்படுத்தப்பட்டது.தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த நான்கு பேரில், மூன்று பேர் தேர்வு எழுதினர். தனித்தேர்வர் ஒருவர் தேர்வு எழுதவில்லை. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X