பொது செய்தி

தமிழ்நாடு

மன்னார் வளைகுடா கடலில் அரியவகை உயிரினங்கள்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

வாலிநோக்கம்:மன்னார் வளைகுடா கடலில் அரியவகை உயிரினங்களின்வசிப்பிடமாக திகழ்கிறது கடல் தாமரை உள்ளது.
இந்த உயிரினத்தின் விலங்கியல் பெயர்ஆக்டினாய்டியா என்பதாகும். 1 செ.மீ., முதல் 6 அடி வரை அழகிய ஆரங்கள் கொண்ட வட்ட வடிவத்தில் உள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் கடலுக்குள் ஒரே இடத்திலேயே உயிர் வாழும். ஆபத்து என்று தெரிந்தால் மட்டுமே மிதவையைப் போன்று மிதந்து வேறு இடத்திற்கு நிலை கொள்ளும். சுருக்கங்களுடன் கூடிய வட்ட இதழ்களை விரித்து, கடலின்மணல் பரப்பிலோ, பாறைகளிலோ ஒட்டி உயிர் வாழும்.

இதன் வயிறு ஒரு குழாய் மூலம் இதழ்களோடு இணைந்திருப்பதுடன் உடலின் நடுவில் வயிறே வாய் போன்று செயல்பட்டு, சிறிய மீன்களை உட்கொள்ளும். அழகிய இதழ்கள் மூலமாக மீன்களை கவர்ந்து இழுத்து விஷ திரவத்தை பீய்ச்சி வயிற்றுக்குள் தள்ளி மூடி விடும். சுத்தமான இடத்தை தேர்வு செய்து புழுவாகவாழ்ந்து பின் தாமரையாக மலர்கின்றன.

கோமாளி மீன்கள் எனப்படும் மீன் இனம் மட்டுமே கடல் தாமரைக்கு இரைகளை கொண்டு வந்து கொடுக்கும்.மன்னார் வளைகுடா கடல்பகுதியில் இவ்வகை கடல்தாமரைகளின் வாழ்விடங்கள் அதிகமாக உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X