பொது செய்தி

தமிழ்நாடு

திரும்பிய இடமெல்லாம் 'டேக் டைவர்சன்': திட்டமிடல் இல்லாமல் வளர்ச்சிப்பணிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அதிருப்தி

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் திரும்பிய பக்கமெல்லாம், பாதாள சாக்கடை, மேம்பாலம் பணிகளுக்காக, ரோடுகள் தோண்டப்பட்டும், அடைக்கப்பட்டும் இருப்பதால் நகருக்குள் எந்த வழியாகவும் நுழைய முடியாத நிலை உள்ளது.மக்களின் சிரமத்தை உணராமல், அதிகாரிகள் அலட்சியமாக பணிகள் மேற்கொள்வதாலும், வேறு மாற்றுப்பாதை இல்லாததாலும் மக்கள் திணறுகின்றனர்.பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை திட்டம், பாலக்காடு ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப்பணி, மீன்கரை ரோட்டில் ரோடு விரிவாக்கம் என, ஒரே நேரத்தில் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுகின்றன. இதனால், அனைத்து ரோடுகளிலும், 'டேக் டைவர்சன்' என வாகனங்கள் திருப்பிவிடப்படுவதால், வாகன ஓட்டுனர்கள் நரக வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.மாற்றுப்பாதைரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், இவ்வழியில் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலகம், மார்க்கெட் ரோடு, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குமரன் நகர், வடுகபாளையம் வழியாக மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில், பைக், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.லாரி, கன்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்கள், திருவள்ளுவர்திடல், சந்தைப்பேட்டை, ஜமீன்ஊத்துக்குளி, நல்லுார் வழியாக பாலக்காடு ரோட்டை அடைகின்றன. தற்போதைய மாற்றுப்பாதைகள் வழியாகவும் வாகனங்கள் செல்ல செல்ல முடியாத நிலை உள்ளது.ரோடெல்லாம் பள்ளம்பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் ரோடு, சந்தைப்பேட்டையில் பாதாள சாக்கடை பணி நடக்கிறது. மீன்கரை ரோட்டில் விரிவாக்கப்பணி நடப்பதாலும், மாற்றுப்பாதையில் பெரும் சிக்கல் நிலவுகிறது.அதேபோன்று, மார்க்கெட் ரோடு, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, மாரியம்மன் கோவில் ரோடு, தேர்நிலையம், வால்பாறை செல்லும் ரோடுகளில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டுள்ளது.இதனால், பாலக்காடு ரோடு, மீன்கரை ரோடு, வால்பாறை ரோடுகளில் இருந்து நகரத்துக்கு வரும் அனைத்து பகுதிகளிலும், 'டேக் டைவர்சன்' செய்யப்படுகிறது.பணிகள் நடப்பது பற்றியோ, மாற்றுப்பாதை குறித்தோ எவ்வித அறிவிப்பும் வைக்காததால், வாகன ஓட்டுனர்கள்பாதி துாரம் சென்று, வழியின்றி திரும்பிச் செல்வதால், மன உளைச்சலுக்கும், சிரமத்துக்கும் உள்ளாகின்றனர்.ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக வரும் வாகனங்கள் உடனடியாக நகருக்குள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நரக வேதனைதற்போது, ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில், பைக், கார் போக்குவரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், பெரும்பாலான ரோடுகள், அடைக்கப்பட்டும், தோண்டப்பட்டும் உள்ளதால், நகரப்பகுதி ரோடுகளில், மக்கள் நரக வேதனை அனுபவிக்கின்றனர்.பொள்ளாச்சி பாதாள சாக்கடை திட்டப்பணி உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகள், திட்டமிடல் இல்லாததையும், மக்களின் சிரமம் அறியாமல், அரசு துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர்.மேலும், அனைத்து துறை அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லாததால், பணிகள் அனைத்தும் தாமதமாகிறது.வளர்ச்சி பணிகள் அவசியம் தான். அதே நேரத்தில் அனைத்து ரோடுகளையும் தோண்டி, சின்னாபின்னம் செய்தால், மாற்றுப்பாதை இன்றி மக்கள் என்ன செய்வார்கள் என்பதை அதிகாரிகள் சிந்திக்கவில்லை. ஆளுங்கட்சியினரும் அறிவுறுத்தவில்லை.அக்கறை இல்லைரோடுகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளதால், வாகனங்களில் செல்வோருக்கு துாசு மண்டலத்தால் மூச்சுத்திணறல், தண்டுவடப்பிரச்னை ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.சொகுசு காரில் பறக்கும் ஆளும்கட்சியினரும், அதிகாரிகளும், மக்கள் பற்றிய சிந்தனையின்றி உள்ளனர். அடிக்கடி ஆய்வுக்கூட்டம் மட்டும் நடத்தி அறிவுரை வழங்கியதுடன், தங்களது பணி முடிந்தது என விட்டு விடுகின்றனர்.ஒரு பகுதியில் மேற்கொண்ட பணி நிறைவு பெற்றபின், மறுபகுதியிலும், மாற்றுப்பாதையிலும் பணி மேற்கொள்ள திட்டமிட வேண்டும்.மக்களின் சிரமத்தை உணர்ந்து, இனியாவது பணிகளை ஒருங்கிணைத்து, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X