பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில் :ராமநாதபுரம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

அப்துல்கலாம்நினைவு நாள்

பரமக்குடி: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 5ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப் பட்டது. பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சபை தலைவர் போஸ், தாளாளர் ராஜேஷ் கண்ணன், சங்க நிர்வாகிகள் சுரேஷ், சுரேஷ்குமார் கலாம் உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

ஐ.டி., பிரிவு கூட்டம்

பரமக்குடி: பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட அ.தி மு.க.,ஐ.டி., பிரிவின் பரமக்குடி நகர் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., சதன் பிரபாகர், மாவட்ட ஐ.டி., பிரிவு செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஐ. டி., பிரிவு துணைச் செயலாளர்வினோத் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, குப்புச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் பதவியேற்பு

கீழக்கரை: கீழக்கரை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாமுகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. பட்டயத்தலைவர் அலாவுதீன் தலைமை வகித்தார். முன்னாள் ரோட்டரி ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தார். தலைவராக மூர் ஹசனுதீன், செயலாளராக எபன் பிரவீன்குமார் தேர்வு செய்யப்பட்டனர். ராமநாதபுரம் பட்டயத்தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, நிர்வாகிகள் காந்தி, ரங்கநாதன் பங்கேற்றனர். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவர் பயாஸ் கவுரவிக்கப்பட்டார்.

பொருட்கள் வழங்கல்

முதுகுளத்துார்: இளஞ்செம்பூர்அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசு அறிவித்த அரிசி,பருப்பு உள்ளிட்ட சத்துணவு பொருட்களை தலைமையாசிரியர் ரெனிஷா வழங்கினார். ஆசிரியர் கார்த்திகேயன்,ஊராட்சி ஒன்றிய பணியாளர் மாரிமுத்து,சத்துணவு அமைப்பாளர் பாலகிருஷ்ணன் இருந்தனர்.

மருத்துவ முகாம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா ஆதங்கொத்தங்குடி கிராமத்தில் டாக்டர்கள் நெப்போலியன், வைசாலி தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது.சுகாதார ஆய்வாளர் முனியசாமி மற்றும் பணியாளர்கள் கிராம மக்கள் 44 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். கிராமத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X