சில்லிங் விற்பனை: பா.ஜ., புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சில்லிங்' விற்பனை: பா.ஜ., புகார்

Added : ஜூலை 28, 2020
Share

உடுமலை:திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு, பா.ஜ., குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தலைவர் குணசேகரன் அனுப்பியுள்ள புகார் மனு:கிராமங்களில், ஊரடங்கு உட்பட அனைத்து நாட்களிலும், சட்டவிரோதமாக, 24 மணி நேரமும், மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. குடிமங்கலம் போலீசில், புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.கிராமங்களில், சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகரிக்கும் முன், சட்டவிரோதமாக மது விற்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X