திருப்புல்லாணி:திருப்புல்லாணி ஒன்றிய குழுக் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்து பேசுகையில், கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில் 100 நாள் திட்ட பணியாளர்கள் காலை 9:00 முதல் பகல் 1:00 மணி வரை வேலை செய்யவேண்டும். ஆனால் விதிமுறைக்கு மாறாக பல ஊராட்சிகளில் பகல் 3:00 மணிவரை கூட்டமாக அமர வைக்கப்படுகின்றனர்.
இதனால் கொரோனா தொற்று நுாறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு பரவும் அபாயம் நிலவுகிறது.எனவே சமூக இடைவெளியை கடைப்பிடித்துபணிகளை செய்ய வேண்டும். ரூ.150 இருந்து ரூ.200 ஆக நுாறு நாள் திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றார். பி.டி.ஓ., ரமேஷ்குமார், ரவி உட்பட 13 ஒன்றியக்கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.திட்டப்பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE