ஊரடங்கில் 30 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: சைல்டு லைன் அமைப்பு நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கில் 30 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: 'சைல்டு லைன்' அமைப்பு நடவடிக்கை

Added : ஜூலை 28, 2020
Share
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கில், 30 குழந்தை திருமணங்கள் 'சைல்டு லைன்' அமைப்பின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, குழந்தை திருமண தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பது குறித்து புகார் தெரிவிக்கவும், அதனை தடுப்பதற்கும்,

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கில், 30 குழந்தை திருமணங்கள் 'சைல்டு லைன்' அமைப்பின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, குழந்தை திருமண தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பது குறித்து புகார் தெரிவிக்கவும், அதனை தடுப்பதற்கும், சமூக நலத்துறையின் ஒரு பகுதியாக, 'சைல்டு லைன்' அமைப்பும் செயல்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் 'சைல்டு லைன் 'அமைப்பின் மூலம், பள்ளிகளிலும், கிராமங்களிலும் தொடர்ந்து தீவிரமாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.கொரோனா ஊரடங்கினால், குழந்தை திருமணங்கள் கூடுதலாகியுள்ளன. உறவினர்களை அழைக்க தேவையில்லை. சுற்றுப்பகுதியினருக்கு தெரிவிக்கவும் தேவையில்லை என்ற நிலையால், 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளை திருமணம் செய்து தருவதற்கு ஏற்ற சூழலாக பெற்றோர் மாற்றிக்கொண்டனர்.மாவட்டத்தில் மட்டுமே, மார்ச் மாதம் 10, ஏப்., 3 மே 7, ஜூன் 16 மற்றும் ஜூலை 24ம் தேதி வரை 4 என 30 குழந்தை திருமணங்களை, சமூக நலத்துறை மற்றும் 'சைல்டு லைன்' அமைப்பு இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளது.சைல்டு லைன் அமைப்பு அலுவலர்கள் கூறுகையில், 'கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, பல பகுதிகளிலும், குழந்தை திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்தனர். புகார்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், சமூக நலத்துறை மற்றும் இந்த அமைப்பின் அலுவலர்கள் சென்று, தடுத்து நிறுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, கிராம ஊராட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்த குழுக்களுக்கு, குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X