பொது செய்தி

தமிழ்நாடு

தண்டவாளத்தில் 'வாக்கிங்': ரயில்வே போலீஸ் 'அலர்ட்'

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:கொரோனா ஊரடங்குக்கு பின், பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், ரயில்கள் வராது என்ற எண்ணத்தில், இளைஞர்கள் பலரும் தண்டவாளத்தை பொழுது போக்கும் இடமாக மாற்றியுள்ளனர்.காலை, மாலையில் 'வாக்கிங்' செல்வது, காலைக்கடன் கழிப்பது, கூட்டமாக அமர்ந்து மது அருந்துவது, விளையாடுவது என விதவிதமான அத்துமீறல்கள் ரயில் வழித்தடங்களில் நடக்கின்றன.வழக்கமான ரயில்கள் இயங்காவிட்டாலும், அவ்வப்போது சரக்கு ரயில்கள் முன்னறிவிப்பின்றி வருகின்றன. சரக்கு ரயில் வரும் நேரம் குறித்து தெரியாமல், தண்டவாளத்தில் அத்துமீறுபவர்கள் விபத்துள்ளாகும் அபாயம் நிலவுகிறது.இதை தவிர்க்க, ரயில்வே பாதுகாப்பு சட்டப்படி, ரயில்வேக்கு சொந்தமான பகுதிகள், தண்டவாளங்களில் அத்துமீறி பிரவேசிப்பதுகண்டறியப்பட்டால், கைது, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைள் பாயும் என ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X