சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ்செய்தி:ராமநாதபுரம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கொலை வழக்கில் போலீஸ் காவல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தங்கம் கடத்தல் விவகாரத்தில் ஏர்வாடியை சேர்ந்த குமார் இரு மாதங்களுக்கு முன் கொலை செய்து புதைக்கப்பட்டார். இந்த வழக்கில் கோரவல்லி கிராமத்தை சேர்ந்த ரவி மகன் சந்துரு 21, சேர்க்கப்பட்டுள்ளார். திருப்புல்லாணி போலீசில் ஒரு வழக்கில் சிறையில் இருந்த இவரை குமார் கொலை வழக்கு தொடர்பாக கேணிக்கரை போலீசார் இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.

டூவீலர் விபத்தில் பெண் பலி

ஆர்.எஸ்.மங்கலம்: ரெகுநாதபுரம் அருகே மணியக்காரன் வலசையைச் சேர்ந்தவர் வானமா தேவி 52, இவர் சிவகங்கை மாவட்டம் சாத்தனுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு, உறவினர் பலமலை நாதனுடன் டூ வீலரில் திரும்பியுள்ளார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடவயல் பகுதியில் சென்ற போது குறுக்கே சென்ற மாட்டின் மீது டூ வீலர் மோதாமல் தடுக்க பிரேக் பிடித்த போது, பின்னால் இருந்த வானமாதேவி டூ வீலரில் இருந்து விழுந்து காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வானமா தேவி நேற்று இறந்தார்.

முதியவர் பலி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் கீழக்கன்னிச்சேரியை சேர்ந்தவர் மலைமேகு 70, வீட்டில் மின்வயரை சரிசெய்யும் போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தற்கொலை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே விளங்குளத்துாரை சேர்ந்த சண்முகவேல் 60, அம்மன் கோயில் பூஜாரியாக உள்ளார். சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல்அவதிப்பட்டு வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆக்கிரமிப்பை அகற்ற போராட்டம்

ராமநாதபுரம்: பேராவூர் ஊராட்சி தங்கப்பாபுரத்தில் ஆதிதிராவிடர்நலத்துறை சார்பில் மக்கள் குடியிருக்க இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மீதி இடத்தை சமுதாயக்கூடம், படிப்பகம் அமைக்க ஒதுக்கினர். இந்நிலையில் அவ்விடத்தை ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதனை அகற்ற பலமுறை கூறியும்அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என புகார் தெரிவித்து தங்கப்பாபுரம் மக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் செய்தனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X