நல வாரியத்தில் சேர ஆன்லைன் பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நல வாரியத்தில் சேர 'ஆன்லைன்' பதிவு

Added : ஜூலை 28, 2020
Share

உடுமலை:தொழிலாளர் நலவாரியத்தின் கீழ், நலத்திட்ட உதவிகள் பெற 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்யும் வசதி துவக்கப்பட்டுள்ளது.கட்டுமானத் தொழிலாளர், உடலுழைப்புத் தொழிலாளர், டிரைவர் உட்பட 17 தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன. இவற்றில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.நல வாரியங்களில், தொழிலாளர்கள்பதிவு செய்துகொள்ள, மாவட்டத் தொழிலாளர் துறையின் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது.கொரோனா பரவல் மற்றும் சமூக இடைவெளியைக் கருத்தில் கொண்டு, இணையதளம் மூலம் உறுப்பினர்கள் பதிவு செய்துகொள்ள வாய்ப்புவழங்கப்பட்டுள்ளது.நலவாரிய அதிகாரிகள் கூறியதாவது: பதிவு விண்ணப்பத்தில், தொழிலாளர்கள் தங்கள் சுய விவரம், தொழில், குடும்ப உறுப்பினர்கள், நியமனதாரர் குறித்த விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.வயது ஆவணமாக பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவச்சான்று இவற்றில் ஏதாவது ஒன்றை,இணைக்க வேண்டும்.ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, வங்கிக்கணக்குப் புத்தகம், தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தொழிலாளியின் பணிச்சான்று தொடர்பாக, வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையின் கீழ் சான்றுகள் பெறப்பட வேண்டும். சரிபார்ப்புச் சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று பதிவேற்ற வேண்டும்.விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் இணைந்து, சரியாக அனுப்பினால், நிரந்தரப்பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவு செய்த மொபைல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம், பதிவுச்சான்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழக அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெறலாம்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X