கொரோனா வார்டு துவங்குவதில் தாமதம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருவாடானை:தொண்டியை மையமாகவைத்து கொரோனா சிகிச்சை வார்டு அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக ஜூன் 28ல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலிருந்து 40 படுக்கைகள் கொண்டு வரப்பட்டது.

ஒரு மாதமாகியும் சிகிச்சை துவங்குவதற்கான பணிகள் நடைபெறவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஐந்து கர்ப்பிணிகளை ராமநாதபுரத்திற்கு அழைத்து செல்ல முயன்ற போது அவர்கள் ஒரே ஆம்புலன்சில் செல்ல மறுத்து சுகாதாரதுறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். போலீசார் சென்று சமரசப்படுத்தினர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இப்பகுதியை சேர்ந்தவர்கள் ராமநாதபுரம், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆகவே தொண்டியை மையமாக வைத்து கொரோனா சிகிச்சை வார்டை துவக்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X