சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலுார் மாவட்டத்தில் 10 போலி டாக்டர்கள் கைது

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

வேலுார் : வேலுார் மாவட்டத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த, 10 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக, போலி டாக்டர்கள், பொது மக்களிடம் பணம் பறிப்பதாக, கலெக்டர் சண்முக சுந்தரத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, வருவாய்த் துறை, போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் என, 50 பேர் அடங்கிய குழுவினர், நேற்று மாவட்டம் முழுதும் சோதனை நடத்தினர். இதில், 10 போலி டாக்டர்களை கைது செய்து, அவர்கள் நடத்திய, கிளினிக்குகளுக்கு 'சீல்' வைத்தனர். சுகாதாரத் துறையினர் கூறியதாவது: வேலுார் மாவட்டம், சைதாப்பேட்டை, கார்ணம்பேட்டை, வசந்தபுரம், பொன்னாத்துார், கொணவட்டம், அரியூர், மந்தவெளிகுப்பம், காவனுார், மேல் ஆலத்துார் ஆகிய பகுதியில் சோதனை நடத்தினோம்.

ஐந்து முதல் பிளஸ் 1 வரை மட்‍டுமே படித்து, கொரோனா சிகிச்சைக்கு, 1,000 முதல் 2,000 ரூபாய் வரை பெற்று மருந்து, மாத்திரைகள் வழங்கியுள்ளனர்.சோதனையில், ௩௫ முதல், ௬௦ வயதுடைய, ௧௦ போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். போலி டாக்டர்கள் குறித்து, 94980 35000 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணில், தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X