தகராறில் கீழே விழுந்த தந்தை பலி; மகன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகராறில் கீழே விழுந்த தந்தை பலி; மகன் கைது

Added : ஜூலை 28, 2020
Share

விழுப்புரம் : குடி போதையில் நடந்த தகராறில், கீழே விழுந்த தந்தை உயிரிழந்தார். அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டை அடுத்த பெரிய நொளம்பை, கொல்லைமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 60; மனைவி அஞ்சலை, 50. ஏழுமலை மது குடித்து, அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.அவர்களது இரண்டு மகன்களும், தகராறை தடுத்து நிறுத்துவது வழக்கம். இதேபோல், 23ம் தேதி இரவு, 8:00 மணியளவில், ஏழுமலை, போதையில் அஞ்சலையிடம் தகராறு செய்துள்ளார். இளைய மகன் ரகு, 29, தடுத்தபோது, ஏழுமலை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த ஏழுமலையை, வேலுார் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார். அவலுார்பேட்டை போலீசார், கொலை வழக்குப் பதிந்து, ரகுவை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X