ஆக்சிஜன், நாடி துடிப்பு பரிசோதனை வீடு வீடாக நடத்த மாநகராட்சி முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன், நாடி துடிப்பு பரிசோதனை வீடு வீடாக நடத்த மாநகராட்சி முடிவு

Added : ஜூலை 28, 2020
Share

சென்னை,கொரோனா பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிய, அனைவருக்கும் ஆக்சிஜன் அளவு மற்றும் நாடி துடிப்பு பரிசோதனை செய்ய, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னையில், கொரோனா பாதிப்பை தடுக்க, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க, வீடு, வீடாக செல்லும் களப் பணியாளர்கள், காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர்.இந்நிலையில், உடலின் ஆக்சிஜன் அளவு மற்றும் நாடிதுடிப்பு பரிசோதனை செய்ய, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பணி துவங்கி உள்ளது.முதற்கட்டமாக, தொற்று தடுப்பு மேற்பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும், 'ஆக்சி-மீட்டர்' கருவி வழங்கப்பட்டு உள்ளது. இதயநோய், 'வீசிங்' போன்ற நாள்பட்ட நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, தினமும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.இது குறித்து, மாநக ராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உடலின் ஆக்சிஜன் அளவு, 95க்கு மேல் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால், தொற்று பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆரம்ப நிலையில் கண்டறிய, ஆக்சிஜன் அளவு, நாடி துடிப்பு பரிசோதனை செய்கிறோம். தற்போது, ஒருங்கிணைப்பாளர்களுக்கு, ஆக்சி-மீட்டர் கருவி வழங்கி உள்ளோம். ஆய்வுக்கு செல்லும் களப் பணியாளர்கள், நாள்பட்ட நோய் பாதிப்பு உடைய நபர்களுக்கு பரிசோதனை செய்வர்.அடுத்தக்கட்டமாக, களப் பணியாளர்களுக்கும் கருவி வழங்கி, காய்ச்சல் பரிசோதனை போல், ஆக்சிஜன் அளவு பரிசோதனையும் செய்ய அறிவுறுத்தப்படும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X