சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர்களை வெட்டிய இருவருக்கு 'கம்பி!'

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருவொற்றியூர் முன்விரோதம் காரணமாக, வாலிபர்களை அரிவாளால் வெட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, திருவொற்றியூர், பெரிய மேட்டுபாளையத்தைச் சேர்ந்தவர் கணேஷ், 25. இவரது நண்பர் ராமசந்திரன், 34; கனரக வாகன ஓட்டுனர்.இருவரும், நேற்று முன்தினம் இரவு, வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது, இரு சக்கர வாகனத்தில், குடிபோதையில் வந்த இருவர், கணேஷ், ராமசந்திரனிடம் தகராறில் ஈடுபட்டு, கணேஷை வெட்டினர். தடுத்த ராமசந்திரனையும் வெட்டினர்.காயமடைந்த இருவரும், திருவொற்றியூர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருவொற்றியூர் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த டேனியல், 28, சிவகுமார், 27, ஆகிய இருவரை கைது செய்தனர்.விசாரணையில், திருவொற்றியூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும், கணேஷுக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 'ஏரியாவில், யார் பெரியவன்' என்ற போட்டி இருந்துள்ளது. இதனால், நாகராஜ், தன் கூட்டாளிகளான, சிவகுமார், டேனியலை ஏவி, கணேஷை வெட்டியது தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X