கிராமங்களில் பால் கொள்முதல் குறைப்பு: உற்பத்தியாளர்கள் வேதனை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

மானாமதுரை:மானாமதுரை,திருப்புவனம் பகுதிகளில் பால் உற்பத்தி அதிகரித்த நிலையில் பாலின் தேவை குறைந்துள்ளதால் கூட்டுறவு பால் பண்ணைகளில் குறைந்த அளவில் பால் கொள்முதல் செய்து அனுப்பி வைக்குமாறு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.

மானாமதுரை, திருப்புவனம் உட்பட மாவட்டம் முழுவதுமுள்ள கூட்டுறவு பால்பண்ணை உறுப்பினர்களிடம் பால் கொள்முதல் செய்யப்பட்டு காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. தற்போது மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதால் மாடுகளின் கறவைத்திறன் அதிகரித்துள்ளது.

பால் உற்பத்தி யாளர்களும் கூடுதலாக மாடுகளை வாங்கி பாலை உற்பத்தி செய்து கூட்டுறவு பால்பண்ணைகளுக்கு அனுப்பி வருவதால் சில வாரங்களாக தினமும் இந்தப் பண்ணைகளுக்கு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவும் அதிகரித்து வருகிறது.கொரோனா தொற்று பரவல் காரணமாக காரைக்குடி ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் பால் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதால் பாலின் தேவையும் குறைந்துள்ளது.

இதனையடுத்து ஆவின் நிறுவனம் பாலை குறைத்து அனுப்பி வைக்குமாறு மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளிலுள்ள கூட்டுறவு பால்பண்ணைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த பாலை என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X