சென்னை, பிறப்பு, இறப்பு சான்று பதிவுகளை, சுகாதார ஆய்வாளர்கள், மொபைல் போன் வழியாக பதிவேற்றம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.சென்னையில், பிறப்பு, இறப்பு நிகழ்வுகள், மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்; இந்த பணியை, சுகாதார ஆய்வாளர்கள் செய்கின்றனர்.தினமும், மண்டல அலுவலகம் சென்று, அதற்குரிய கணினியில் பதிவேற்றம் செய்தனர். தற்போது, கொரோனா தடுப்பு பணியில், இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஆய்வாளர், இரண்டு வார்டுகள் வீதம் பணி புரிகின்றனர்.
இதனால், பிறப்பு, இறப்பு சான்று பதிவேற்றும் பணி முடங்கியது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, சுகாதார ஆய்வாளர்கள் மொபைல் போனில், பதிவேற்றம் செய்யும் வகையில், தொழில்நுட்ப வசதி செய்து கொடுக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இது குறித்து, சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சி சட்டப்படி, சுகாதார ஆய்வாளர்கள் தான், பிறப்பு, இறப்பு பதிவேற்றம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன், டெங்கு தடுப்பு பணியும் செய்வதால், தினமும், மண்டல அலுவலகம் செல்ல முடியாத நிலை உள்ளது.இதனால், சுகாதார ஆய்வாளர்கள், மொபைல் போனில் பதிவேற்றம் செய்யும் வகையில், வசதி செய்து கொடுக்க உள்ளோம். ஓரிரு நாளில், இந்த பணி துவங்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE