ரேடியோவை பொக்கிஷமாக பாதுகாக்கும் முதியவர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேடியோவை பொக்கிஷமாக பாதுகாக்கும் முதியவர்

Added : ஜூலை 28, 2020
Share
கீழக்கரை:கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் அப்துல் காதீர் செய்யதுஇப்ராகீம் 67.பைத்துல்மால் தர்ம நிறுவனத்தில் பொருளாளராக பணியாற்றி வருகிறார். ஆர்மோனியப்பெட்டி அளவில் உள்ள ரேடியோவை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து பயன்படுத்தி வருகிறார்.அவர் கூறியதாவது:1962ல் சென்னையில் ரேடியோவை வாங்கினேன். பிரத்யேகமான மர ஸ்டாண்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை, திருச்சி, மதுரை உள்ளிட்ட

கீழக்கரை:கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் அப்துல் காதீர் செய்யதுஇப்ராகீம் 67.பைத்துல்மால் தர்ம நிறுவனத்தில் பொருளாளராக பணியாற்றி வருகிறார். ஆர்மோனியப்பெட்டி அளவில் உள்ள ரேடியோவை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து பயன்படுத்தி வருகிறார்.

அவர் கூறியதாவது:1962ல் சென்னையில் ரேடியோவை வாங்கினேன். பிரத்யேகமான மர ஸ்டாண்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை, திருச்சி, மதுரை உள்ளிட்ட வானொலி நிலையங்களில் இருந்து அனைத்து ஒலிபரப்பும் தெளிவாக கேட்கிறது. வால்வுகள் மூலம் இயங்கி, பிளாட்டினம் மெர்குரி கம்பிகள் சூடான பிறகே பாடல்கள் கேட்கின்றன.பழுது ஏற்பட்டால் இதற்கான எலட்ரிக்கல் பொருட்கள் இம்மாவட்டத்தில் கிடைப்பதில்லை. சென்னையில் இருந்து வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது.வால்வுகள் மூலம் இயங்கும் பழைய ரேடியோ, பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. 58 ஆண்டு பழமையான ரேடியோ பெட்டியை பாதுகாத்து பராமரிப்பது எப்போதும் மகிழ்ச்சியே, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X