சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேடவாக்கம் சூளை தாங்கல் ஏரிக்கு விமோசனம் பிறப்பது எப்போது?

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

மேடவாக்கம், சூளை தாங்கல் ஏரியை, ஒன்றிய அதிகாரிகள் கண்டுக்கொள்ளாததால், ஒருபுறம் ஆக்கிரமிப்பு, மறுபுறம் குப்பை மற்றும் கழிவு நீரால் சீரழிந்து வருகிறது.சென்னை, மேடவாக்கம், ரங்கநாதபுரத்தில் அமைந்துள்ள சூளை தாங்கல் ஏரி, 50 ஏக்கர் பரப்பு கொண்டது.மேடவாக்கம், ரங்கநாத புரம் ஆகிய பகுதி விவசாய பாசனம், நிலத்தடி நீர் உயர்வுக்கு, இந்த ஏரி தான் பிரதானம்.நாளடைவில், விவசாய நிலங்கள், குடியிருப்புகளாக மாறின. இதனால், ஏரி பராமரிப்புப் பணியை அதிகாரிகள் மறந்தனர்.ஏரி நிலத்தை, வீட்டு மனைகளாக பிரித்து சிலர் விற்பனை செய்தனர்.மின் வாரியமும், ஊராட்சி மன்ற நிர்வாகமும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தன. அரசும், தன் பங்கிற்கு ஏரியை ஆக்கிரமித்து, பஸ் நிலையம் கட்டியது.அதன் பலனாக, ஏரியின் பரப்பளவு, 20 ஏக்கராக சுருங்கியது. மழைக்காலத்தில், இந்த ஏரி நிரம்பி வழியும்.அப்போது, சுற்று வட்டார பகுதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மதகு, கரையை உடைத்து விடுவது வழக்கம். இது, பட்டா நிலத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.இந்த ஏரியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பரங்கி மலை ஒன்றிய நிர்வாகம், பல ஆண்டுகளாக இதை கண்டுக் கொள்ளவில்லை.ஆனால், அவ்வப்போது, ஏரியை சீரமைத்தோம் என, கணக்கு மட்டும் காட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்பாளர்கள், பல ஆண்டுகளாக, தங்கள் வீட்டு குப்பை, கழிவுகளை, இந்த ஏரியில் கொட்டி வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன், நீர்வள ஆர்வலர்கள் போராட்டம் காரணமாக, ஏரியின் ஒரு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.அங்கிருந்த, 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பிற்கு மாற்றப்பட்டன. அத்துடன், ஏரி சீரமைப்பு கைவிடப்பட்டது.கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, நம் நாளிதழ், 'நமக்கு நாமே' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, சமூக நல விரும்பிகள், மக்களை, நீர்நிலைகளை பராமரிக்க ஊக்கப்படுத்தியது.அதன் பலனாக, பல நீர்நிலைகளுக்கு விமோசனம் பிறந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டலால், இந்த ஏரியை தன்னார்வலர்கள் சீரமைக்க முயற்சிக்கவில்லை.சமீப நாட்களாக பெய்து வரும் மழையால், ஏரியில் கழிவு நீர் கலந்த மழை நீர் சேர்ந்துள்ளது. மேலும், ஏராளமான ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்துள்ளன.எனவே, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புக்களை, பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும். அதை முழுமையாக சீரமைத்து, மழை நீர் சேகரிப்பு மையமாக மாற்றினால், சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் உயரும் என, பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். -- -நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X