சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணிச்சல் பெண்ணுக்கு கமிஷனர் பாராட்டு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சென்னை, சிறுமியிடம், மர்ம நபர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதை, மொபைல் போனில் படம் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணை, கமிஷனர் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.சென்னை, வியாசர்பாடியில், மர்ம நபர் ஒருவர், ௫ வயது சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். இதை, அதே பகுதியைச் சேர்ந்த, பூஜா என்ற பெண், மொபைல் போனில் படம் பிடித்து, கணவர் முகமது அலி உதவியுடன், அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.அதன்பின், அந்த மர்ம நபர் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்தனர். குற்ற நிகழ்வை, படம் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்த பூஜா மற்றும் அவரது கணவர் முகமது அலியின் துணிச்சலை பாராட்டி, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X