சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாயின் கள்ளக்காதலனை கொலை செய்த மகன் கைது

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

குமரன் நகர் யின் கள்ளக்காதலனை கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, போரூர் அடுத்த காரம்பாக்கம், பத்மாவதி நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி, 46; தி.நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில், காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.அதே கடையில் பணிபுரியும், மேற்கு சைதாப்பேட்டை, சடையப்ப முதலி தெருவைச் சேர்ந்த செல்வி, 44, என்பவருக்கும், முனியாண்டிக்கும் பழக்கம் ஏற்பட்டது.செல்வியின் கணவர், 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.இருவரும், ஐந்து ஆண்டுகளாக, சைதாப்பேட்டையில் உள்ள, செல்வி வீட்டில், தம்பதி போல வசித்து வந்தனர்.இது பிடிக்காத செல்வியின் மகன் வேலாயுதம், 28, அதே பகுதியில், நண்பர்களுடன் தங்கி உள்ளார். முனியாண்டியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.நேற்று முன்தினம் முழு ஊரடங்கால், வேலாயுதம், செல்வியிடம் இரவு உணவு கேட்டுள்ளார். அவர் உணவை, முனியாண்டியிடம் கொடுத்து அனுப்பினார்.மேற்கு சைதாப்பேட்டை, பழைய மாம்பலம் சாலை வழியாக முனியாண்டி நடந்து சென்றபோது, நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து, வேலாயுதம், முனியாண்டியை கத்தியால் குத்தினார்.சம்பவ இடத்திலேயே முனியாண்டி பலியானார். குமரன் நகர் போலீசார், வேலாயுதத்தை கைது செய்தனர். தப்பியோடிய அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X