அப்துல்கலாமுக்குஅரசியல் கட்சியினர் அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அப்துல்கலாமுக்குஅரசியல் கட்சியினர் அஞ்சலி

Added : ஜூலை 28, 2020
Share

ராமேஸ்வரம்:முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினை வகத்தில் அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., செயலர் முனியசாமி, முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா, பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகரன், ராமேஸ்வரம் அ.தி.மு.க., நகர் செயலர் கே.கே.அர்ச்சுனன், நகர் அவைத் தலைவர் குணசேகரன், முன்னாள் நகராட்சி தலைவர் ஏ.அர்ச்சுனன், மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

ம.தி.மு.க., மாநில இளைஞரணி துணை செயலர் பழனிச்சாமி, மாநில மாணவரணி துணை செயலர் வக்கீல் பாலகணேஷ், அ.ம.மு.க., மாவட்ட செயலர் ஆனந்த், நிர்வாகி ஜி.முனியசாமி, கலாம் நண்பர் டாக்டர் ராகவன், தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, சமூக ஆர்வலர்கள் கலாம் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X